வெள்ளி, 25 மே, 2012

பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளி மட்டுமே

வாழ்கத் தமிழ்

பெரியார் சமூகப்போராளி இல்லை. புரட்சியாளர் இல்லை. பெண்ணுரிமை போராளி இல்லை. அவர் ஒரு கடவுள் மறுப்பாளி மட்டுமே. அவர் மூட பழக்க வழக்கங்களை கண்டித்தார். எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல் ஆராய்ந்து பார்த்து பகுத்தறிந்து அதன் பின்னரே அதை பின்பற்ற சொன்னவர். இந்து மத புராண புளுகுகளை எதிர்த்தவர். ராம நவமி எதிர்த்து அதற்க்கு பதிலாக ராவண நவமியை கொண்டாடுவதற்கு ராமனை கொளுத்த சொன்னவர். ராமனையும், ராமாயணத்தையும் கொளுத்திக் காட்டியவர். இந்து மதத்தின் அனைத்து புராண புளுகுகளையும் அம்பலப்படுத்தியவர். கள்ளுக்கடைகளை ஒழிப்பதற்காக தன்னுடைய சொந்த தோப்பில் உள்ள தென்ன மரங்களை வேரோடு வெட்டி சாய்த்தவர்.  
நானே சொன்னதாக இருந்தாலும் அதை சிந்தித்துப் பார்த்து சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் தவறாக இருந்தால் விட்டு விடுங்கள். பெரியார் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவனில்லை என்னையம் நீங்கள் கேள்வி கேட்கலாம் என்று தன்னை தானே தன் விமர்ச்சனம் செய்து கொண்டவர்.  
கடவுள் மறுப்பு என்பதை விட்டு பெரியார் ஒன்றும் புதுமை புரட்சி என்று எதுவும் செய்து விடவில்லை. கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, இந்து மத எதிர்ப்பு என்று தன்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் குறுக்கி கொண்டார். அதற்க்கு மேல் அவர் ஒன்றும் பெரிதாக செய்து விடவில்லை. கடவுள் மறுப்பு என்பது ஆரம்பக் கட்ட குழந்தை பாடம். அதை விட்டே அவர் வெளியே வரவில்லை. 
பார்பனர்கள் கர்ப்பை பற்றி கட்டிய கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தினார். அது பெண் விடுதலை என்பதற்கான நோக்கம் ஆகாது. அது கடவுள் மறுப்பு என்பதன் அடுத்தக்கட்ட நீட்சி அவ்வளவு தான். அவர் கடவுள் மறுப்பு என்பதை விட்டு வெளியே வராததினால், தமிழ் சமுகத்தை,தமிழர் பண்பாட்டை, தமிழின மக்களை, தமிழ் நாட்டை எந்த அளவுக்கு ஏமாற்றி இருக்கிறார் என்பதை வரலாறுகளை புரட்டிப்பார்க்கும் பொது தெரியும். அவரால் நம் தமிழ் நாட்டின் இடங்களை எத்துணை இழந்திருக்கிறோம் என்பது புரியும். 

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க | அலையல்ல சுனாமி

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க | அலையல்ல சுனாமி வாழ்க தமிழ்

வியாழன், 17 மே, 2012

திங்கள், 7 மே, 2012